கவுண்டன்பாளையத்தில் தெருநாய்களை கொன்று வாய்க்காலில் வீச்சு போலீசார் விசாரணை
புதுவையில் தெருநாய்களை விஷம் வைத்து கொன்று வாய்க்காலில் வீசியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி,
புதுவை கவுண்டன்பாளையம் பெருமாள்கோவில் வீதியில் 4 தெருநாய்கள் கொல்லப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் கிடந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உழவர்கரை நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இளநிலை பொறியாளர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வாய்க்காலில் கிடந்த நாய்களை வெளியே எடுத்து போட்டனர்.
அந்த நாய்களை யாரோ விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நாய்களை கொன்றவர்கள் அதை வாய்க்காலில் போட்டு உள்ளனர்.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து கால்நடைத்துறையினர் நாய்களை பரிசோதனை செய்து மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகர பகுதியில் புதைத்தனர். மர்ம நபர்கள் யாரோ நாய்களை கொன்று கழிவுநீர் வாய்க்காலில் வீசியிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இளநிலை பொறியாளர் சிவக்குமார் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story