பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க சென்ற வனத்துறையினர் மீது தாக்குதல் 3 துப்பாக்கிகள் பறிமுதல்
பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க சென்ற வனத்துறையினர் தாக்கப்பட்டனர். மேலும் பறவை வேட்டைக்கு பயன்படுத்திய 3 நாட்டு துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
வில்லியனூர்,
புதுவையில் வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வப்போது ரோந்து சென்று வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி துணை வனக்காப்பாளர் வஞ்சுளவல்லி உத்தரவின்பேரில் வனத்துறை அதிகாரி ராமலிங்கம் மற்றும் வனத்துறையினர் வில்லியனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆங்காங்கே நரிக்குறவர் இனத்தவர்கள் சிலர் பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
மோதல்
அவர்கள் வனத்துறையினர் வருவதை பார்த்ததும் பறவைகளை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்கள் விற்பனை செய்ய வைத்திருந்த பறவைகளை வனத்துறையினர் கைப்பற்றினர்.
அதுபோல கூடப்பாக்கம் பகுதியில் வனத்துறையினர் சென்றபோது நரிக்குறவர் இனத்தினர் வேட்டையாடிய பறவைகளை ரோட்டோரம் வைத்து விற்பனை செய்தனர். அதை பறிமுதல் செய்ய முயன்றபோது வனத்துறையினருக்கும், நரிக்குறவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
துப்பாக்கிகள் பறிமுதல்
இதில் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் வனத்துறையினர் சென்ற ஜீப்பை மறித்து தாக்கி சேதப்படுத்தினார்கள். வனத்துறையினரையும் சிலர் தாக்கினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்தனர். இதன் காரணமாக மோதலை கைவிட்டு நரிக்குறவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நரிக்குறவர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய 3 நாட்டு துப்பாக்கிகள், அவர்கள் பிடித்து வைத்திருந்த 20 கிளிகள் மற்றும் இறைச்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 33 பறவைகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் ஊசுடு ஏரியில் மீன்பிடிக்க விரிக்கப்பட்டிருந்த வலைகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story