முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரம்: கூட்டணி கட்சிகளை கூட்டி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி எடப்பாடி பழனிசாமிக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்
முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக கூட்டணி கட்சிகளை கூட்டி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கேயம்,
காங்கேயத்தில் பா. ஜனதா கட்சி சார்பில் பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பிரதமர் நரேந்திரமோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ரேடியோ மூலம் ஒலி பரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு காங்கேயம் நகரத்தலைவர் கலா நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பொன்.ருத்ரகுமார், பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய தலைவர்கள் ஆனந்த்குமார், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சிவப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமரின் உரையை காணொலி காட்சி மூலம் கேட்டார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் நோக்கத்தையும், இதனால் மக்களுக்கு ஏற்படும் பயன்கள் பற்றியும் விரிவாக விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சிவப்பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் வேட்பாளர்
பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறும்போது “சமீபகாலமாக தமிழகத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்த சர்ச்சை நீடித்து வருகிறது. எனவே இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் முதல்-அமைச்சர் உடனடியாக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா வலுவாக காலூன்றும். யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் என்பது குறித்து கூட்டணி தலைமை முடிவு செய்யும்” என்றார்.

Related Tags :
Next Story