செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 65 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 65 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 853 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 48 ஆயிரத்து 479 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 743-ஆக உயர்ந்தது. 631 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 42 ஆயிரத்து 539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41 ஆயிரத்து 425 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 437 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 677 பேர் கொரானா தொற்றால்் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 3 பேர் இறந்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 646-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 885 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 434-ஆக உயர்ந்தது. 327 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story