மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் அண்ணா சிலை அருகில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் அண்ணா சிலை அருகில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு முத்தையன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு பெரியசாமி, கொளஞ்சியம்மாள், பவுனாம்பாள், சுதா ஆகியோர் பேசினர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, நூறு நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்த வேண்டும். வேலைக்கான கூலியை உயர்த்த வேண்டும். வறுமைக்கோட்டு பட்டியலில் மாற்றுத்திறனாளிகளை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து தா.பழூர் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) ஸ்ரீதேவியிடம் மனு அளித்தனர்.

Related Tags :
Next Story