கரூரில் ஜவுளி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
கரூரில் ஜவுளி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் மேற்கு பிரதட்சணம் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயதாசன் (வயது 35). இவர் கரூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷபூச்சி ஒன்று விஜயதாசனை கடித்துள்ளது. இதையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் விஷபூச்சி கடித்ததால் உடலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மனவேதனையில் இருந்த விஜயதாசன் மனமுடைந்து தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் விஜயதாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story