மராட்டியத்தில் புதிதாக 2,498 பேருக்கு தொற்று; மும்பையில் 4-வது நாளாக 600-க்கு கீழ் கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் புதிதாக 2,498 பேருக்கு தொற்று; மும்பையில் 4-வது நாளாக 600-க்கு கீழ் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 29 Dec 2020 1:02 AM GMT (Updated: 29 Dec 2020 1:02 AM GMT)

மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், மும்பையில் தொடர்ந்து 4-வது நாளாக பாதிப்பு 600-க்கு கீழ் உள்ளது.

தொடர்ந்து குறைகிறது
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 498 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சத்து 22 ஆயிரத்து 48 ஆக உயர்ந்தது.

மேலும் 50 பேர் கொரோனாவினால் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 49 ஆயிரத்து 305 ஆக அதிகரித்தது. இதைத்தவிர கொரோனாவினால் சிகிச்சை முடிந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 501 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 14 ஆயிரத்து 449 ஆக உள்ளது. மாநிலத்தில் 57 ஆயிரத்து 159 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பை, புனே
மும்ைபையில் நேற்று புதிதாக 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இங்கு தொடர்ந்து 4-வது நாளாக 600-க்கும் கீழ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு 2 லட்சத்து 91 ஆயிரத்து 471 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 88 ஆக அதிகரித்து உள்ளது.

புனே நகரில் புதிதாக 154 பேரும், பிம்ப்ரி-சிஞ்ச்வாட்டில் 53 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story