அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: தேர்தல் கூட்டணி பற்றி ஜனவரியில் தெரிவிப்பேன் கமல்ஹாசன் பேட்டி
தேர்தல் கூட்டணி பற்றி ஜனவரியில் தெரிவிப்பேன் என திருச்சியில் கமல்ஹாசன் கூறினார்.
திருச்சி,
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்தார். அன்று பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு இரவு திருச்சியில் தங்கினார். நேற்று காலை அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
தேர்தல் கூட்டணி
கேள்வி:- உங்கள் தலைமையில் 3-வது அணி அமைக்கப்படும் என்று கூறினீர்களே?.
பதில்:- தமிழக அரசியலில் மூன்றாவது அம்சமாக நாங்கள் இருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. கூட்டணி பற்றி நான் ஏற்கனவே கூறியதுபோல் ஜனவரியில் தெரிவிப்பேன்.
கேள்வி:- ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்கிறீர்கள். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றி, பல விருதுகளை வாங்கி இருக்கிறது. ஆகவே வளர்ச்சியை முன்வைத்து தான் பிரசாரம் செய்கிறோம் என்று கூறுகிறாரே?.
பதில்:- நான் சொல்வதற்கு மாறாக அவர் பேசியிருக்கிறார். அது மறுப்பாக இருக்க முடியாது. தன்னை தற்காத்துக் கொள்வதற்காக அவ்வாறு பேசியிருக்கிறார். தமிழகம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் லஞ்சத்தின் விலைப்பட்டியல் இப்போது கையில் வைத்துள்ளேன். அதில் ஆணாக இருக்கும்போது ஒரு விலை. பெண்ணாக இருக்கும் போது, வேறு விலை என லஞ்சமாக வசூலிக்கிறார்கள். தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சத்தில் தமிழகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான விலைப்பட்டியல் தான் இது. இந்த விலைப்பட்டியல் குறித்து எல்லோருக்கும் தெரியும். இதை நீங்கள் வழிமொழிய தான் முடியும்.
ஒவ்வொரு வீட்டிலும் கணினி
கேள்வி:- இந்த லஞ்ச பட்டியல் குறித்து தி.மு.க. போல் கவர்னரை சந்தித்து மனு கொடுப்பீர்களா?.
பதில்:- உங்களிடம் கொடுப்பதே, அதற்கு சமம் என்று நினைக்கிறேன்.
கேள்வி:- ரஜினி கட்சி தொடங்க கூடாது என்பதற்காகத்தான் உடல்நிலை சரியில்லாதது போல் நாடகமாடுகிறார் என்று ஒரு பேச்சு இருக்கிறதே?.
பதில்:- இது ரஜினியின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். அது தான் முக்கியம். 40 ஆண்டுகால நண்பருக்கு நான் கூறும் வாழ்த்துக்கள். அவருடைய உடல்நிலை முதலில் சரியாக வேண்டும்.
கேள்வி:- ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே ஊழல், லஞ்சத்துக்கு மக்கள் பழகிவிட்டார்கள். இப்போது நீங்கள் கூறும் இந்த மாற்றம் மக்களிடம் சாத்தியப்படுமா?.
பதில்:- கண்டிப்பாக சாத்தியப்படும். மக்கள் இவற்றையெல்லாம் வாங்க வரிசையில் நிற்பதால் தான் லஞ்சம் பெருகி உள்ளது. மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வரும்போது, மக்கள் விண்ணப்பிக்காமலேயே தானாக கிடைக்க வழி செய்ய முடியும். அப்படியானால் இடைத்தரகர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள். லஞ்சமும் இருக்காது. மக்களுக்கு தேவையானதை முன்கூட்டியே யூகித்து செயல்படும் அரசாக இருக்கும். மேலும், இந்த திட்டம் அறிவிக்கப்படும்போது, ஒவ்வொரு வீட்டிலும் இணையதள வசதியுடன் கூடிய கணினி இருக்கும். அது அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பை வலுப்படுத்தும். மக்கள் நீதி மய்யத்தின் தலைமை செயலகம்கூட பேப்பர்லெஸாக இயங்கும் என்று கூறியிருக்கிறோம்.
அரசின் முதலீடு
கேள்வி:- அப்போது கணினியை இலவசமாக மக்களுக்கு கொடுப்பீர்களா?.
பதில்:- அது இலவசம் அல்ல. அரசின் முதலீடு ஒவ்வொரு வீட்டுக்கும் மின் இணைப்பு மீட்டர் எப்படி கொடுக்கப்படுகிறதோ, அதுபோல இதுவும் உங்கள் உரிமை.
கேள்வி:- தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் குக்கிராமங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள். நீங்கள் சொல்கிற அனைத்தையும் குக்கிராமம் வரை கொண்டு சேர்க்க முடியுமா?.
பதில்:- நாங்களும் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
கேள்வி:- மக்கள் நீதி மய்யத்தின் சாதனை என்ன?.
பதில்:- நேர்மை.
கேள்வி:- இரட்டை இலையை முடக்க சதி செய்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாத ஆளுமையை பயன்படுத்தி சிலர் சதி திட்டம் போடுகிறார்கள் என அ.தி.மு.க. அமைச்சர்கள் கூறி இருக்கிறார்களே?.
பதில்:- இரட்டை இலை சின்னத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடிய விஷயங்களை இப்போது ஆளுகிறவர்கள் தான் செய்து வருகிறார்கள்.
கேள்வி:- உங்களுடன் ரஜினி இணைந்து பணியாற்ற விரும்புவாரா?.
பதில்:- அரசியலுக்கு வந்தால் நட்பு போய்விட வேண்டும் என அவசியம் இல்லையே. பெரியாரும், ராஜாஜியும் நட்பாக தானே இருந்துள்ளார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு
கேள்வி:- எம்.ஜி.ஆர். திருச்சியை தானே 2-வது தலைநகராக்க வேண்டுமென திட்டமிட்டு இருந்தார். நீங்கள் மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும் என்கிறீர்கள். இதில் முரண்பாடு இருக்கிறதே?.
பதில்:- எல்லா நகரத்தையும் அந்த அந்தஸ்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை.
கேள்வி:- அனைத்து மாவட்டத்தையும் தலைநகராக்க முடியும் என்பது சாத்தியமா?.
பதில்:- ஒவ்வொரு விஷயத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்தையும் முக்கிய இடமாக மாற்றலாம்.
கேள்வி:- சாதிவாரி கணக்கெடுப்பை எப்படி பார்க்கிறீர்கள்.
பதில்:- அதில் எனக்கு எதிர்ப்பு தான். அதுக்காக இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லவில்லை. இட ஒதுக்கீடு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
கேள்வி:- நீங்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மக்கள் ஓட்டு போடுவார்களா?. அல்லது தனித்துப் போட்டியிட்டால் மக்கள் ஓட்டு போடுவார்களா?.
பதில்:- நேர்மையாக இருந்தால் ஓட்டு போடுவார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி:- 3-வது அணி அமைந்தால் நீங்கள் முதல்-அமைச்சர் வேட்பாளரா?.
பதில்:- ஆம்.
அமைச்சர்களின் ஊழல் பட்டியல்
கேள்வி:- டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே?.
பதில்:- விவசாயத்தை மதிக்காத நாடு வீழ்ச்சி அடையும். அது நம்ம நாட்டுக்கு நடக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.
கேள்வி:- புதிய வேளாண் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தானே உங்களுடைய கட்சியின் பொதுச்செயலாளர் மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டார்.
பதில்:- எங்கள் கருத்துடன் ஒத்து வராததால் தான் அவர் விலகிச் சென்றுவிட்டார்.
கேள்வி:- டார்ச்லைட் சின்னம் கிடைக்கவில்லை என்றால் வேறு சின்னத்தை தேர்ந்தெடுப்பீர்களா?.
பதில்:- டார்ச்லைட் சின்னம் கிடைக்க சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கேள்வி:- அமைச்சர்களின் ஊழல் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?
பதில்:- விரைவில்.
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார். அப்போது பொதுச்செயலாளர் முருகானந்தம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக பெண்கள், மாணவிகளுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.இந்த கூட்டத்தில் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான அக்ஷராஹாசனும் கலந்து கொண்டார்.

Related Tags :
Next Story