நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மேலும் 33 பேருக்கு கொரோனா


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மேலும் 33 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Dec 2020 8:27 AM IST (Updated: 29 Dec 2020 8:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் நெல்லை மாநகராட்சி மற்றும் மானூர், களக்காடு, ராதாபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 244 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 ஆயிரத்து 921 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 211 பேர் இறந்து உள்ளனர். தற்போது 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், ஆலங்குளம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 250 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 8 ஆயிரத்து 43 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை கொரோனாவுக்கு 158 பேர் உயிரிழந்து உள்ளனர். 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 40 ஆக அதிகரித்து உள்ளது.

இதில் 15 ஆயிரத்து 823 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 76 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

Next Story