கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி: இழப்பீடு கேட்டு உறவினர்கள் நெல்லையில் சாலை மறியல்
திருவேங்கடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலியான சம்பவத்தில் உரிய இழப்பீடு கேட்டு உறவினர்கள் நெல்லையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் கியாஸ் சிலிண்டர் பழுது பார்த்தபோது திடீரென்று வெடித்து சிதறியதில், கியாஸ் நிறுவன மேலாளர் வைகுண்டம், ஊழியர்கள் பசுபதி, காளி ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தனர். இதில் வைகுண்டம், காளி ஆகிய 2 பேரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர்.
இழப்பீடு
இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் வைகுண்டம் உடலை குடும்பத்தினர் வாங்கிச்சென்றனர்.
ஆனால் காளியின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். உயிரிழந்த காளியின் பெண் குழந்தைகள் வாழ்க்கைக்கு உதவி செய்யும் வகையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உறவினர்கள் மறியல்
ஆனால் இதற்கு கியாஸ் நிறுவன அதிகாரிகள் தரப்பில் சரியான பதில் கிடைக்காததால், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ஐகிரவுண்டு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

Related Tags :
Next Story