ஸ்ரீபெரும்புதூரில் பெற்ற மகனை கொல்ல முயன்ற தாய் கைது


சித்ரா
x
சித்ரா
தினத்தந்தி 30 Dec 2020 1:57 AM IST (Updated: 30 Dec 2020 1:57 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் பெற்ற மகனை கொல்ல முயன்ற தாய் கைது செய்யப்பட்டார்.

கொல்ல முயற்சி
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சித்ரா (வயது 20). இவர்களது மகன்கள் கார்த்திக் (3), அருண். சித்ரா கணவனை பிரிந்து தனது மகன்களுடன் வாழ்ந்து வந்தார். 2-வது மகன் அருண் சில மாதங்களுக்கு முன் வீட்டில் படுக்கையில் தூங்கும் போது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தான். தற்போது மூத்த மகன் கார்த்திக்குடன் வசித்து வருகிறார். இநத நிலையில் சித்ரா தன்னுடைய மகன் கார்த்திக்கை கழுத்தை நெரித்து கொலை செய்ய முற்சிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக வேகமாக பரவி வந்தது.

கைது
ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் சித்ராவை பிடித்து விசாரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சித்ரா வேறு ஒருவருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பில் பெற்ற மகனை கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கார்த்திகை மீட்ட போலீசார் செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஏற்கனவே தீ விபத்தில் இறந்து போன 2-வது மகன் அருணையும் சித்ரா கள்ளக்காதலுக்காக கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story