வாங்கபாளையத்தில் குப்பைகள் அள்ளப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


வாங்கபாளையத்தில் குப்பைகள் அள்ளப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Dec 2020 6:32 AM IST (Updated: 30 Dec 2020 6:32 AM IST)
t-max-icont-min-icon

வாங்கபாளையத்தில் குப்பைகள் அள்ளப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலாயுதம்பாளையம்,

காதப்பாறை ஊராட்சி வாங்கப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மெயின் ரோட்டில் கூடினர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதியில் குப்பைகள் அள்ளப்படுவதில்லை என்றும், சாக்கடைகால்வாய் தூர்வாரப்படவில்லை என்றும், இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரப்பி வருகிறது என குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டிக்கிறோம் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சுகாதாரதுறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது, பொதுமக்கள் .குப்பை அள்ளுவதற்கு நாங்கள் வரி கட்டி வருகிறோம். ஆனால் குப்பை களை அள்ளுவது இல்லை. இனி நாங்கள் வரி கட்டமாட்டோம் என்றனர்.

இதனையடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story