திருவேங்கடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து டிரைவர் பலி: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம்
திருவேங்கடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பலியான டிரைவர் உடலை வாங்க மறுத்து கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நெல்லை,
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் ராஜபாளையம் மம்சாபுரத்தை சேர்ந்த வைகுண்டம் (வயது 70), நெல்லை தாழையூத்து சண்முகபுரத்தை சேர்ந்த டிரைவர் காளி (36) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
கடந்த 23-ந்தேதி கியாஸ் சிலிண்டரை பழுது பார்த்தபோது வெடித்து சிதறியதில் வைகுண்டம், காளி மற்றும் பசுபதி பாண்டியன் ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர்களில் வைகுண்டம் மற்றும் காளி ஆகியோர் இறந்தனர். இதில் வைகுண்டம் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலை வாங்க மறுப்பு
இதேபோல் காளியின் உடலையும் உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால் கியாஸ் நிறுவனம் சார்பில் காளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி, அவருடைய உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.
நேற்று முன்தினம் 2-வது நாளாக உடலை வாங்க மறுத்ததுடன் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக காளியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் ஊர் நாட்டாண்மை கருத்தபாண்டி தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
அவர்கள் கொடுத்த மனுவில், கியாஸ் சிலிண்டர் விபத்தில் பலியான காளிக்கு உமா சக்தி என்ற மனைவியும், இந்துமதி (16), இசைராணி (8) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். காளியின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த அவருடைய குடும்பத்தினர் தற்போது தவித்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
காளியின் குடும்பத்தினருடன் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வண்ணை முருகன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவன தலைவர் கண்ணபிரான் பாண்டியன் மற்றும் ஆதரவாளர்கள் உடன் வந்திருந்தனர்.
பேச்சுவார்த்தையில் தீர்வு
பின்னர் முற்றுகையிட்டவர்களை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச்சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், கியாஸ் நிறுவனம் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் காப்பீட்டு தொகையையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து காளியின் உடலை உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.

Related Tags :
Next Story