பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிய ‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும்’ கனிமொழி எம்.பி. பேச்சு
‘குடிநீர் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிய தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும்’ என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
புளியங்குடி,
“விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற தலைப்பில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தென்காசி வடக்கு மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். புளியங்குடி டி.என்.புதுக்குடியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த கனிமொழி எம்.பி., பின்னர் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்பதன் காரணமாகத்தான் தமிழக அரசே ஓரளவுக்கு செயல்பட்டு வருகிறது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிய அத்தனை திட்டங்களும் தி.மு.க. ஆட்சியில் தான் தொடங்கும். பல்வேறு துறைகளில் ஊழல் செய்வதை மட்டுமே எடப்பாடி அரசு செய்து வருகிறது.
தி.மு.க. ஆட்சி
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனால் டாஸ்மாக் மற்றும் பார்கள் திறந்து வைக்கப்பட்டு உள்ளன. விவசாயிகளுக்கு எதிரான ஆட்சியை இப்போது எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். இந்த மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. குடிநீர் பிரச்சினை உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து உள்ளது. இது எல்லாம் மாற வேண்டும் என்றால் மீண்டும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். எனவே வரும் தேர்தலில் அனைவரும் தி.மு.க.விற்கு வாக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
சலவை தொழிலாளிக்கு நிதி உதவி
பின்னர் அவர் மெயின் ரோட்டில் நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கினார். மேலும் அங்கு கட்சி கொடி ஏற்றினார். தொடர்ந்து டி.என் புதுக்குடியை சேர்ந்த விதவை சலவை தொழிலாளியான பாப்பாத்தி என்பவரின் குடிசை வீட்டிற்கு சென்று அவருக்கு நிதி உதவி மற்றும் அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினார்.
நான்கு வழிச்சாலை
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பகுதியில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக செழிப்பாக உள்ள விவசாய நிலங்களை அழித்து அந்த திட்டத்தை நிறைவேற்ற அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் விவசாயிகள், செழிப்பான விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்றுப்பாதையை அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர். அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. இப்படி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய பல செயல்களை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
ரஜினிகாந்த் நலம்பெற வேண்டும்
யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கூட்டணி அமைக்கலாம். ஆனால் வெற்றி என்பது தி.மு.க.வுக்கு மட்டுமே. வரும் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவு, அவரது தனிப்பட்ட முடிவு. அவர் பூரண நலம் பெற்று மறுபடியும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் பல பேரின் விருப்பமும், எனது விருப்பமும். அவர் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கிராமசபை கூட்டம்
முன்னதாக வாசுதேவநல்லூர் ஒன்றியம் ராயகிரி, தெற்குச்சத்திரம், சிவகிரி பகுதிகளில் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார். பின்னர் கடையநல்லூர் ஒன்றியம் சிங்கிலிபட்டியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சிகளில், தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ.துரை, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை யு.எஸ்.டி.சீனிவாசன், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ரசாக், மாவட்ட பொருளாளர் ஷேக் தாவுத், பொறுப்புக்குழு உறுப்பினர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சைபுன்னிசா சேகனா, ராயகிரி கே.டி.சி.குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story