பூந்தமல்லி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது


பூந்தமல்லி அருகே  பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
x
தினத்தந்தி 31 Dec 2020 5:16 AM IST (Updated: 31 Dec 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியை அடுத்த மேப்பூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு சொந்தமான நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மேப்பூர் வி.ஏ.ஓ. சதீஷ்குமாரிடம் விண்ணப்பித்திருந்தார்.

அதற்கு அவர், பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நாராயணன், இதுபற்றி லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் செய்தார். வி.ஏ.ஓ.வை கையும் களவுமாக பிடிக்க ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நாராயணனிடம் கொடுத்து, அதை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை வி.ஏ.ஓ. அலுவலகத்தில் மறைந்து இருந்தனர்.

அப்போது நாராயணன், ரசாயன பொடி தடவிய ரூ.8 ஆயிரத்தை லஞ்சமாக வி.ஏ.ஓ. சதீஷ்குமாரிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கியதும், லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சதீஷ்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Next Story