திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Dec 2020 7:47 AM IST (Updated: 31 Dec 2020 7:47 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசன விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. சிறப்பு வாய்ந்த கோவிலில் ஆண்டிற்கு 2 முறை தியாகராஜருக்கு பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திருவாதிரை திருவிழாயொட்டி பாத தரிசன விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் இரவு தியாகராஜருக்கு மகா அபிேஷகம் நடந்தது.

பாததரிசனம்

அதனைதொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு பாத தரிசனம் நடந்தது. பின்னர் பக்தர்கள் வரிசையாக நின்று பாத தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி கவிதா தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

ஆபத்சகாயேஸ்வரர்

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதனையொட்டி நடராஜபெருமானுக்கும் சிறப்புஅபிஷேக,ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து தெட்சிணாமூர்த்திக்கும் சிறப்புஅபிஷேக,ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில், நீடாமங்கலம் காசிவிசுவநாதர்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story