தென்காசியில் கலெக்டர் கார் உள்பட 170 வாகனங்களில் பம்பர் கம்பிகள் அகற்றம்
தென்காசி கலெக்டர் கார் உள்பட 170 வாகனங்களில் பம்பர் கம்பிகள் அகற்றப்பட்டன.
பம்பர் கம்பிகள் அகற்றம்
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, போக்குவரத்து ஆய்வாளர் விஜய் உள்ளிட்ட அதிகாரிகள், தென்காசி இலத்தூர் விலக்கு அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது கார், ஜீப், வேன் உள்ளிட்ட 150 வாகனங்களின் முகப்பில் வைக்கப்பட்டு இருந்த பம்பர் கம்பிகளை ஒரே நாளில் அகற்றினர். தொடர்ந்து அடுத்த நாட்களில் நடைபெற்ற வாகன சோதனையின்போது மேலும் 18 வாகனங்களின் பம்பர் கம்பிகள் அகற்றப்பட்டன.
கலெக்டர், சூப்பிரண்டு
இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் ஆகியோர் தாமாகவே முன்வந்து தங்களது கார்களில் உள்ள பம்பர் கம்பிகளை அகற்றினர். இதேபோல் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவின் கார் பம்பர் கம்பிகள் அகற்றப்பட்டது.
Related Tags :
Next Story