வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பாதிக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிக்கும் விதமாக உள்ளது. எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சார்ந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதன் தொடர்ச்சியாக வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் விலாயத் உசேன்,
மாவட்ட செயலாளர் அப்துல் லத்தீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் கலந்து கொண்டனர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story