அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரம்: “எங்கள் கருத்தை ஏற்கனவே சொல்லிவிட்டோம்”; துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
x
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தினத்தந்தி 31 Dec 2020 10:49 AM IST (Updated: 31 Dec 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து தங்களின் கருத்தை ஏற்கனவே சொல்லி விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவிக்கப்பட்டார். இருப்பினும் பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது நிரனனனுபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்து இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- மரியாதைக்குரிய சிறந்த நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக முன்பு அறிவித்திருந்தார். நான் அதை வரவேற்று இருந்தேன். இப்போது அவர் உடல்நலம் கருதி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறார். அவர் நீண்ட ஆயுளுடன், நல்ல உடல் நலத்துடன் வாழ எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் வேட்பாளர்

கேள்வி:- முதல்-அமைச்சர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். நீங்கள் எப்போது பிரசாரத்தை தொடங்குவீர்கள்?

பதில்:- உரிய நேரத்தில், உரிய முறையில் என்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்குவேன்.

கேள்வி:- முதல்-அமைச்சர் வேட்பாளரை தேர்தலுக்குப் பின்னரே முடிவு செய்வோம் என்று பா.ஜ.க. மேலிட பார்வையாளர் சொல்லியிருக்கிறாரே, அது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- எங்களுடைய கருத்தை நாங்கள் ஏற்கனவே சொல்லி விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story