தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு 2 பேர் பலி டெல்டாவில் 68 பேருக்கு தொற்று


தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு 2 பேர் பலி டெல்டாவில் 68 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 1 Jan 2021 10:17 AM IST (Updated: 1 Jan 2021 10:17 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். டெல்டாவில் 68 பேருக்கு தொற்று உறுதியானது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 178 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 13 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

தற்போது 238 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர்-நாகை

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளது. 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 109 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 22 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 151 ஆக உயர்ந்தது. நேற்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது முதியவர் உயிரிழந்தார். இதனால் நாகை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

Next Story