கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க பழைய குற்றவாளிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க பழைய குற்றவாளிகளை போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அமைதியை உறுதி செய்யும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பராமரிக்கப்படும் வரலாற்று பதிவேடுகளில் உள்ள பழைய குற்றவாளிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பழைய குற்றவாளிகள் அனைவரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேரில் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழைய குற்றவாளிகள் நேற்று முன்தினம் காலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் விசாரணை செய்தார்.
குற்றசெயல்களில் ஈடுபடக்கூடாது
அப்போது இனிவரும் காலங்களில் நீங்கள் எவ்வித குற்ற சம்வங்களிலும் ஈடுபட கூடாது என அறிவுரை வழங்கினார். மேலும் குற்றவாளிகள் மீதான குற்றங்கள் குறித்தும், வழக்கின் போக்கு குறித்தும் கேட்டறிந்த அவர் வழக்கு நிலுவையில் இல்லாத தற்போது நன்னடத்தையுடன் உள்ள நபர்கள் மீது குற்ற பதிவேட்டை நீக்க பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார்.
இந்த விசாரணையின் போது மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story