பெண்ணாடம் அருகே சாலையில் தேங்கி கிடக்கும் மழை நீரில் மீன்பிடிக்கும் போராட்டம்
பெண்ணாடம் அருகே சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி மேட்டுத் தெருவில் இருந்து ஆற்றுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில்தான் ஊராட்சி மன்ற அலுவலகமும் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது. மேலும் கழிவுநீர் செல்ல வாய்க்கால் இல்லாததால் சாலையிலேயே தண்ணீர் ஓடுகிறது.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
போராட்டம்
இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தேங்கி இருந்த மழை நீரில் கிராம மக்கள் நாற்று நட்டும், தூண்டில்கள் போட்டு மீன் பிடிக்கும் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், கழிவுநீர் வாய்க்கால் கட்டுவதாகவும் ஊராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story