நெல்லையில் தலைமை ஆசிரியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
நெல்லையில் தலைமை ஆசிரியர் வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாவீதுராஜா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 65). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவில் மனோகரன் தன்னுடைய குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார்.
இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு திருட திட்டமிட்டனர். அதன்படி மனோகரனின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 40 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
போலீசார் விசாரணை
பின்னர் அதிகாலையில் மனோகரன் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததையும், நகைகள் கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்
இதேபோன்று மனோகரனின் பக்கத்து வீட்டில் வசித்த தனியார் நிறுவன ஊழியரான சரவணகுமார் (45) நேற்று முன்தினம் தன்னுடைய உறவினரின் வீட்டுக்கு சென்றார். இவரது வீட்டிலும் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ேள புகுந்து பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரத்ைத திருடிச் சென்றனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story