சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வேலாயுதம்பாளையம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
வேலாயுதம்பாளையம்,
வேலாயுதம்பாளையம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு பூக்களாலும், அருகம்புல்களாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் காகிதபுரம், புகழிமலை, ஈ.ஐ.டி.பாரி ஆகிய பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
லாலாபேட்டை கீழேவிட்டுகட்டியில் உள்ள மகாகணபதி கோவிலில், சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பிறகு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. நொய்யல் முத்தனூரில் உள்ள செல்வவிநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, கரைப்பாளையம், திருக்காடுதுறை குளத்துப்பாளையம், தவிட்டுப்பாளையம், குறுக்குச்சாலை, வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Tags :
Next Story