பொன்னேரியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
பொன்னேரி பகுதி விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் பொன்னேரி தாலுகாவில் அடங்கிய மீஞ்சூர், சோழவரம் வட்டாரங்களில் 19 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். அதன்படி நேற்று பொன்னேரி அருகே உள்ள சின்னவேண்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் காஜா சாகுல்அமீது முன்னிலை வகித்தார். பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் தலைமை தாங்கி நெல் சுத்தம் செய்யும் எந்திரத்தை இயக்கி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பேசினார்.
விழாவில் கூட்டுறவு சங்க தலைவர் தமிழ்ச்செல்வன், இயக்குனர் பொன்னுதுரை, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல், பா.ஜ.க.வின் அரசு பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன், மாநில சிறப்பு பொது குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன் மற்றும பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story