மாவட்ட செய்திகள்

சூரியூரில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது உற்சாகத்தில் மாடுபிடி வீரர்கள் + "||" + Mukurthakkal planted to Jallikattu in Suriyur by cowboys in excitement

சூரியூரில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது உற்சாகத்தில் மாடுபிடி வீரர்கள்

சூரியூரில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது உற்சாகத்தில் மாடுபிடி வீரர்கள்
சூரியூரில் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதனால் மாடுபிடி வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
திருவெறும்பூர்,

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அரசு விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் முன்பு நடந்ததை போல் இல்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்தது.


இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் முதலாவது ஜல்லிக்கட்டு நடைபெறும் சூரியூர் கிராமத்தில் நேற்று முன்தினம் பூமிபூஜை போடப்பட்டு ஜல்லிக்கட்டு விழாவிற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள காளைகள் வளர்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தயாராகும் காளைகள், வீரர்கள்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘சூரியூரில் 150 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதுஎங்களுக்கு திருவிழா. குல தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து தங்கள் வீட்டில் உள்ள காளைகளுக்கு பொங்கல் ஊட்டி பின்பு வாடிவாசலில் களம் இறக்குவோம்’ என்று உற்சாகமாக கூறினார்கள்.

சூரியூாில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி காளை வளர்ப்போர் தங்களது காளைகளுக்கு உடற்பயிற்சி வழங்குவதுடன் காளைகளுக்கு நீச்சல் பயிற்சியும் அளித்து வருகின்றனர்.

மேலும் மாடுபிடி வீரர்கள் தாங்கள் மாடு ஏறுவதற்கான ஆயத்த வேலைகளையும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு களைகட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை துணிக்கடையில் தீவிபத்து: உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம்
மதுரை துணிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை