சட்டமன்ற தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் பொய் பேசுகிறார்; வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு
திண்டுக்கல் மாநகர வடக்கு பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு வடக்கு பகுதி செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் மேற்கு மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலின் போது விவசாயம், கல்வி, நகைக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் பொய் கூறினார். அதனால் 38 தொகுதிகளை தி.மு.க. வென்றது.
அதேநேரம் இடைத்தேர்தலில் மக்கள், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர வாக்களித்தனர். அந்த நிலை வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். இதனால் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்கு, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மீண்டும் மு.க.ஸ்டாலின் பொய் கூறுகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதியாக திகழ்கிறது. அது தொடர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும், என்றார்.
இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே.டி.நடராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, முரளிதரன், மேற்கு மாவட்ட துணை செயலாளர் பிரேம்குமார், திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன் என்ற பிரேம், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் ரவிக்குமார், மாணவர் அணி இணை செயலாளர் பிரபு, ஜெயலலிதா பேரவை பகுதி இணை செயலாளர் பாலசண்முகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மணிகண்டன், இணை செயலாளர் அரசன், வடக்கு பகுதி துணை செயலாளர் செல்வராஜ், பொருளாளர் மோகன்தாஸ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story