மராட்டியத்தில் புதிதாக 2,765 பேருக்கு பாதிப்பு: கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 10,362 பேர் குணமடைந்தனர்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 Jan 2021 5:47 AM IST (Updated: 5 Jan 2021 5:47 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

மும்பை, 

மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் 10 ஆயிரத்து 362 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

மராட்டியத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. நேற்று மாநிலம் முழுவதும் நடத்திய கொரோனா பரிசோதனையில் புதிதாக 2 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்து 47 ஆயிரத்து 11 ஆக அதிகரித்து உள்ளது. நோய் தொற்றின் பாதிப்பு காரணமாக மேலும் 29 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 49 ஆயிரத்து 695 ஆக அதிகரித்தது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சையில் இருந்து குணமாகி 10 ஆயிரத்து 362 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 47 ஆயிரத்து 361 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 48 ஆயிரத்து 801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயித்துக்கு கீழ் வந்துள்ளது.

மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 46 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மாநில தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து94 ஆயிரத்து 986 ஆகஉள்ளது.

நோய் தொற்று காரணமாக மும்பையில் 3 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 138 ஆக உயர்ந்தது.

தாராவியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 826 ஆக உள்ளது. மேலும் 3 ஆயிரத்து 490 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்



Next Story