கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்


கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Jan 2021 8:56 AM IST (Updated: 5 Jan 2021 8:56 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினர்.

நாகப்பட்டினம்,

தமிழக அரசு டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டது. அதே போல் புரெவி மற்றும் நிவர் புயல்களால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு எக்ேடருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

100 சதவீத நிவாரணம்

புயல்கள் காரணமாக சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிக அளவு மழை பெய்ததால் பயிர்கள் பாதிப்படைந்து. விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். ஆனால் கொள்ளிடம் ஒன்றிய பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்யவில்லை. இதனால் 75.89 சதவீதம் தான் நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக அளவீடு செய்து 100 சதவீத நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுமனைப்பட்டா

வேளாங்கண்ணி சிறு, குறு வியாபாரிகள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

வேளாங்கண்ணி மாதா பேராலயம் உலக புகழ்பெற்ற சுற்றுலா தலம் என்பதால், இங்கு சிறு, குறு வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள் வராததால் வியாபாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சிறு, குறு வியாபாரிகளுக்கு அரசு வீட்டுமனைப்பட்டா வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story