மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கடலூரில் விவசாய சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கடலூரில் விவசாய சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2021 11:25 AM IST (Updated: 5 Jan 2021 11:25 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்,

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெல், மணிலா, உளுந்து, வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் மெய்யழகன், குமரகுருபரன், பஞ்சாட்சரம், சம்பத்குமார், காந்தி, மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட துணை செயலாளர் சரவணன், ஜெகதீசன், செயலாளர் தென்னரசு, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story