சென்னை புறநகர் பகுதியில் கனமழை: சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு
சென்னை புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம்,
சென்னை புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், சிட்லபாக்கம் உள்பட புறநகர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
பல்லாவரம் ரேடியல் சாலை மேம்பாலம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் வெள்ளநீர் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம் சானடோரியம் அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் வெள்ள நீர் தேங்கியதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஊழியர்கள் அவதிப்பட்டனர். கல்பாக்கம் பேருராட்சி சிவசங்கரன் தெரு, இளங்கோ தெரு, பீர்க்கன்காரணை பேரூராட்சி ராஜீவ்காந்தி நகர் நகர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
ஆவடி, பெரம்பூரில்...
இதேபோல் ஆவடி பட்டாபிராம், திருநின்றவூர், பருத்திப்பட்டு, திருமுல்லைவாயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக நேற்று முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
சென்னை மட்டும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கன மழையால், பெரம்பூர் பாரதி சாலை, பட்டேல் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, கவுதமபுரம் சாலை ஆகிய பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. அதன் ஒரு பகுதியாக பெரம்பூர் மாநகர போக்குவரத்து பஸ் நிலையத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியது.

Related Tags :
Next Story