கயத்தாறு அருகே சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு


கயத்தாறு அருகே சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 6 Jan 2021 10:10 AM IST (Updated: 6 Jan 2021 10:10 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி, 

கயத்தாறு அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் கயத்தாறு அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 2018-19, 2019-20 ஆகிய 2 ஆண்டுகளாக உளுந்து, பாசிப்பயறுக்கு எந்தவித இழப்பீட்டு தொகையும் வழங்கப்படவில்லை.

இழப்பீடு

கடந்த ஆண்டு மழை நிவாரணம் வழங்குவதற்கான ஆவணங்களை வருவாய்த்துறையினர் சேகரித்தனர். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி இதுவரை அந்த தொகையும் வழங்கப்படவில்லை. ஆகையால் எங்களுக்கு சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Next Story