பணி நிரந்தரம் கேட்டு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


பணி நிரந்தரம் கேட்டு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2021 2:15 AM GMT (Updated: 7 Jan 2021 2:15 AM GMT)

பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்று வரை மருத்துவ பணிகள் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் சுமார் 13 ஆயிரம் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். 2 வருடம் ஒப்பந்தம் முறை பணி நிறைவடைந்ததும், காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 6 வருடம் பணி நிறைவு பெற்ற நிலையில் இதுவரை 2 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே காலமுறை ஊதியத்திற்கு மற்றப்பட்டனர். இதனால் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலையரசி, துணைத் தலைவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர், இணைச் செயலாளர் ராஜேஸ்வரி, பொருளாளர் மார்க்கரேட் மற்றும் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கியும், வாழ்த்தியும் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, பொருளாளர் சுந்தரராஜன் ஆகியோர் பேசினார்கள்.

Next Story