வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருத்துறைப்பூண்டியில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் சார்பி்ல் சாலை மறியல் நடைபெற்றது. மறியல் போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ.. மாவட்ட பொருளாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் நடராஜன், நபி, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் மகாதேவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகன் தேவதாஸ் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story