ஆவுடையானூரில் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணி கருத்து கேட்பு கூட்டம்; கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரில் ராமநதி- ஜம்புநதி இணைப்பு மேல்நிலைக்கால்வாய் திட்ட பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் இந்த கால்வாய் செல்லும் இடத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பட்டா மாறுதல், இழப்பீட்டு தொகை
பெறுதல் உள்பட பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. இதனை அந்த பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர். இதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர், கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்காக சிறப்புபட்டா மாறுதல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். கால்வாய்க்காக வெட்டப்படும் மணலை விளைநிலங்களில் போடாமல் இருக்கவும், புதிய சட்டவிதிகளின்படி இழப்பீடு தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
கூட்டத்தில் செயற்பொறியாளர் எஸ்.ரமேஷ், கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (நிலம்) சேக் அப்துல் காதர், தென்காசி உதவி கலெக்டர் ஷீலா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கால்வாய் திட்டத்திற்கு நிலம் வழங்கும் ஆவுடையானூர், கடையம்பெரும்பத்து, வெங்காடம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த நில உரிமையாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story