வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாகர்கோவிலில் சி.ஐ.டி.யு.வினர் சாலை மறியல் 100 பேர் கைது
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாகர்கோவிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு.வினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் தங்கமோகனன், பொருளாளர் சித்திரா, மாநில நிர்வாகி ஐடாஹெலன், மாவட்ட துணைத்தலைவர்கள் லெட்சுமணன், சோபனராஜ், நடராஜன், சந்திரபோஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கைது
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நேசமணிநகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். சாலை மறியல் காரணமாக கலெக்டர் அலுவலக சாலை பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story