டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2021 10:27 AM IST (Updated: 7 Jan 2021 10:27 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், இதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மற்றும் தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை வாபஸ் பெறக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், கணபதி, மலர்விழி, புருஷோத்தமன், சகாதேவன், சிங்காரவேல், அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story