திருவையாறு அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
திருவையாறு அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவையாறு,
திருவையாறு அருகே கருப்பூர் கிராமத்தில் தனியார் இடத்தில் மதுக்கடை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர். இதை அறிந்த கருப்பூர் கிராம மக்கள் மதுக்கடை திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் மதுக்கடை திறக்கமாட்டோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதியம் கருப்பூரில் புதிய மதுக்கடை திறப்பதற்காக ரூ.6 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை டாஸ்மாக் மேற்பார்வையாளர் கண்ணதாசன் மற்றும் ஊழியர்கள் மதுக்கடை திறக்க இருந்த இடத்தில் வைத்தனர்.
சாலை மறியல்
இதை பார்த்த கிராம மக்கள் கவுடசி தொண்டுநிறுவன செயலாளர் கருணாமூர்த்தி தலைமையிலும், ஊராட்சிமன்ற தலைவர் மதுவிழிசெந்தமிழ்செல்வன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் கருப்பூர் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், துணை போலீஸ் சூப்பிரண்டு சித்தரவேலு, மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், விஜயலெட்சுமி, ஸ்ரீதேவி, வருவாய் ஆய்வாளர் சந்துரு, கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா, நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது மதுக்கடை கருப்பூரில் திறக்கப்படமாட்டாது என்றும், மதுபானங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதைத்தொடர்ந்து மதுபாட்டில்கள் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. சாைல மறியல் காரணமாக கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story