தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2021 9:49 AM GMT (Updated: 8 Jan 2021 9:49 AM GMT)

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி நகர இட ஒதுக்கீடு போராட்டக்குழு சார்பில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், மாவட்ட செயலாளர்கள் பெரியசாமி, சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பாரிமோகன், மாவட்ட தலைவர்கள் இமயவர்மன், செல்வகுமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், பாலகிருஷ்ணன், இளைஞர் சங்க மாநில செயலாளர் செந்தில், பசுமை தாயக மாநில துணைச்செயலாளர் மாது, கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர் டி.எம். முரளி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அனைத்து சாதியினருக்கும் வகுப்புவாரி உரிமை வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் நம்பிராஜன், தொகுதி அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன், தொகுதி அமைப்பு தலைவர் டி.ஜி.மணி முதலியார், மாநில துணை அமைப்பு தலைவர் வாசு நாயுடு, சிறப்பு மாவட்ட செயலாளர் சின்னசாமி, இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் தகடூர் தமிழன், கட்டிட தொழிற்சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் திருமலை ராஜா, நகர அமைப்புத் தலைவர்கள் கார்த்திகேயன், துரைராஜ் செட்டியார், செந்தில்குமார் செட்டியார், பாட்டாளி இளைஞர் சங்க நகர துணை செயலாளர் கோவிந்தராஜ், தொகுதி அமைப்பு செயலாளர் சரவணகுமார், ரியல் எஸ்டேட் சங்க மாவட்ட செயலாளர் ராஜா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், சார்பு பொறுப்பாளர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story