வாணியம்பாடியில் கால்வாய் அமைக்கும் பணியை தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தினர் - பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு


வாணியம்பாடியில் கால்வாய் அமைக்கும் பணியை தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தினர் - பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2021 5:24 PM IST (Updated: 8 Jan 2021 5:24 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் கால்வாய் அமைக்கும் பணியை தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர்.

வாணியம்பாடி, 

வாணியம்பாடி நகரின் மையப்பகுதியில் பாலாற்றில் கிளையாறு செல்கிறது. இதில் கழிவுநீர் அதிகம் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்ததது. இதனை தடுக்கும் பொருட்டு கனிமவளம் சுரங்கதுறை மூலம் கனிமவள சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடி நிதியை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டு, அமைச்சர் நிலோபர்கபில் பெற்றார்.

இந்த நிதியின் மூலம் ஷாகிராபாத் முதல் ஆற்றுமேடு பகுதி வரை 660 மீட்டர் நீளத்திற்கு 1.5 மீட்டர் அகலத்தில் குடியிருப்பு சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

இதை அறிந்த வாணியம்பாடி நகர தி.மு.க. பொறுப்பாளர் சாரதிகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பணி நடக்கும் இடத்திற்கு வந்து இப்பணி செய்யக் கூடாது எனவும், இந்த கால்வாய் அமைக்கும் திட்டப்பணி குறித்து வரைபடத்தை காண்பித்தால் மட்டுமே பணி செய்ய விடுவோம் என கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அங்கிருந்த பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பாதிலியே பணிகள் நிறுத்தப்பட்டு தோண்டிய கால்வாய் பள்ளங்கள் மூடப்பட்டது.

Next Story