மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு; எடப்பாடி பழனிசாமி உத்தரவு


மணிமுத்தாறு அணை
x
மணிமுத்தாறு அணை
தினத்தந்தி 9 Jan 2021 4:10 AM GMT (Updated: 9 Jan 2021 4:10 AM GMT)

பாசனத்திற்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மணிமுத்தாறு அணை
நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1 மற்றும் 2-வது ரீச்சுகளின் கீழ் உள்ள மறைமுகப் பாசனப் பகுதிகளில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடிமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று மணிமுத்தாறு அணையில் இருந்து, மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1 மற்றும் 2-வது ரீச்சுகளின் கீழ் உள்ள மறைமுக பாசனப்பரப்புகளுக்கு 12-1-2021 முதல் 31-3-2021 வரை 79 நாட்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

11,134 ஏக்கர் நிலம்
இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாளையங்கோட்டை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஆகிய வட்டங்களில் உள்ள 11,134 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story