பதவி உயர்வுக்கான சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு: தென்காசி தாசில்தாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; மனித உரிமை ஆணையம் உத்தரவு


பதவி உயர்வுக்கான சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு: தென்காசி தாசில்தாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 9 Jan 2021 9:47 AM IST (Updated: 9 Jan 2021 9:47 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டம் வேலாயுதபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் ஆண்கள் விடுதியில் வார்டனாக பணியாற்றி வருபவர் சரவணன். இவருக்கு தேர்வு நிலை வார்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்ட போதிலும் அதற்கான சம்பள உயர்வை தென்காசி ஆதிதிராவிட நல தாசில்தார் கிருஷ்ணவேல் வழங்கவில்லையாம்.

பட்டியல் இனத்தவரை சேர்ந்தவர் என்ற காரணத்துக்காக தனக்கு சம்பள உயர்வு வழங்கவில்லை என்றும், இது மனித உரிமை மீறல் என்றும் சரவணன் மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோன்று தென்காசி மாவட்டம் ரெட்டியார்பட்டி ஆதிதிராவிட ஆண்கள் விடுதியில் பணியாற்றி வரும் இக்னேசி என்பவரும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுப்படி அவர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்காதது கடமை தவறிய செயலாகும். இதற்காக மனுதாரர்கள் இருவருக்கும் தமிழக அரசு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை தாசில்தார் கிருஷ்ணவேலிடம் இருந்து தமிழக அரசு பிடித்தம் செய்து கொள்ளலாம். மனுதாரர்கள் இருவருக்கும் பதவி உயர்வு அடிப்படையில் சம்பளம் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும். தாசில்தார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story