குறைதீர்க்கும் நாள் கூட்டங்களை நேரில் நடத்தக்கோரி கண்களில் கருப்பு துணி கட்டி, காதை பொத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
குறைதீர்க்கும் நாள் கூட்டங்களை நேரில் நடத்த கோரி, கண்களில் கருப்பு துணி கட்டி, காதை கைகளால் பொத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மின்சார வாரியம் சார்பில் நடந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை கொரோனா ஊரடங்கினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து நடைபெறவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கடந்த சில மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாமல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் மட்டும் பெறப்படுகிறது. மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள், மின்நுகர்வோர்கள் தங்களது கோரிக்கையினை அதிகாரிகளிடம் நேரில் தெரிவிக்க முடியவில்லை என்று விவசாயிகள் உள்ளிட்டோர் தெரிவித்து வந்தனர்.
நூதன ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் நடத்தவும், திரையரங்குகளில் சினிமா பார்க்கவும், பஸ்களில் முழுமையாக பயணிகள் ஏற்றவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனாவை காரணம் காட்டாமல் மாதந்தோறும் விவசாயிகள், மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள், வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவற்றை இந்த மாதத்தில் இருந்து நேரில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கண்களில் கருப்பு துணி கட்டியும், காதுகளை கைகளால் பொத்திக்கொண்டும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், குறை தீர்க்கும் நாள் கூட்டங்களை நேரில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுவினை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

Related Tags :
Next Story