வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியை பெற வேண்டும் கோட்டூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை
வளர்ச்சி பணிகளை ேமற்கொள்ள தேவையான நிதியை பெற வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, முத்துக்குமரன், ஒன்றியக்குழு துணை தலைவர் விமலா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-
சுசிலாஜெயராமன்(இ.கம்யூ): உள்ளாட்சி தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. பொதுமக்களுக்கு வேண்டிய சாலைவசதி, குடிநீர்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இன்னும் நிறைவேற்ற முடியவில்லை. நிதி வரவில்லை என எத்தனை கூட்டங்களுக்கு சொல்ல முடியும். அரசிடமிருந்து நிதியை பெற தலைவர் முயற்சி எடுக்க வேண்டும்.
மினிகிளினிக்
அரவிந்த்(பா.ஜனதா): பாரத பிரதமர் திட்டத்தில் வீடு கட்டுவதையும் கழிவறை மற்றும் குடிநீர் திட்டங்களிலும் பொதுமக்கள் முழுமையாக பயன் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆனந்த்ராஜ் (தி.மு.க.): வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பலத்த மழையாக பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த கதிர்கள் சேதமடைந்துள்ளது. எனவே மறு கணக்கீடு எடுத்து ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும்.
பூங்கோதை சேகர்(இ.கம்யூ): 3 மாதங்களாக வேலை இல்லாமல் விவசாய தொழிலாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே 100 நாள் வேலையை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சாந்திமகேந்திரன்(இ.கம்யூ): நல்லூர் கிராமத்தில் மினிகிளினிக் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மினி கிளினிக் தொடங்க வேண்டும்.
குடிநீர்
சாந்திபாலதண்டாயுதம்(இ.கம்யூ): திருக்களர் ஊராட்சி கோட்டகம் கிராமத்திற்கு கடைவீதி மேல்நிலை தொட்டியிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் செல்லவில்லை. கோட்டகம் கிராம மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகிறார்கள். எனவே உடனடியாக ஆழ்குழாய் கைப்பம்பு அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சுமித்திராமறையரசு(சுயே): சம்பா அறுவடை நடைபெற்று வருகிறது. எனவே மண்ணுக்குமுண்டானில் அரசுநேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.
மாரியப்பன்(மா.கம்யூ): வெங்கத்தான்குடி ஊராட்சி தெற்கு நாணலூர் ஊராட்சிகளில் ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகள் பழுதடைந்து தண்ணீர் தேங்கி குடியிருப்பு களிலிருந்து சென்றுவர முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதியை பெற முயற்சி
மணிமேகலைமுருகேசன் (தலைவர்): கொரோனா நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்பட்டோம். கன மழையால்
மக்கள் பாதிக்கப்பட்ட போது திருவாரூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட முகாம் அமைத்து உணவு மற்றும் மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. கோட்டூர் ஒன்றியத்துக்கு தேவையான நிதியை பெற அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசி முயற்சி எடுத்து வருகின்றோம். நிதியை பெற்ற பின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story