மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் தீ விபத்து குடோனில் இருந்த 200-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் எரிந்து சேதம் + "||" + More than 200 bicycles were burnt and damaged in a fire in Kanchipuram

காஞ்சீபுரத்தில் தீ விபத்து குடோனில் இருந்த 200-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் எரிந்து சேதம்

காஞ்சீபுரத்தில் தீ விபத்து குடோனில் இருந்த 200-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் எரிந்து சேதம்
காஞ்சீபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் இருந்த 200-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் எரிந்து சேதம் அடைந்தன.
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் கோவில் சன்னதி தெருவில் சைக்கிள் விற்பனையகத்தின் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் புதிய சைக்கிள்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று திடீரென அந்த குடோனில் இருந்து புகை வெளிவர தொடங்கியது. தீ விபத்து குறித்து உடனடியாக அந்த பகுதி மக்கள் காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சைக்கிள்கள் சேதம்

இந்த தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட புதிய சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரியகுளத்தில் பெயிண்டு கடையில் பயங்கர தீ விபத்து ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
பெரியகுளத்தில் உள்ள பெயிண்டு கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
2. கறம்பக்குடியில் மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து ரூ.20 லட்சம் பொருட்கள் நாசம்; பசு மாடு செத்தது
கறம்பக்குடியில் மரப்பட்டறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. பசுமாடு ஒன்று தீயில் கருகி செத்தது.
3. கொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படுத்தி விட்டது கன்னியாகுமரி வியாபாரிகள் உருக்கம்
கொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படுத்தி விட்டது என கன்னியாகுமரி வியாபாரிகள் கண்ணீர் மல்க வேதனையை வெளிப்படுத்தினர்.
4. கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து 63 கடைகள் எரிந்து சாம்பல்; பல கோடி ரூபாய் சேதம்
கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 63 கடைகள் எரிந்து சாம்பலானது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
5. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏ.சி. எந்திரம் வெடித்ததால் தீ விபத்து ஆய்வகத்தில் ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏ.சி. எந்திரம் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ஆய்வகத்தில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.