அரியலூர் நகராட்சி ஊழியர்கள் நாமம் போட்டு போராட்டம்


அரியலூர் நகராட்சி ஊழியர்கள் நாமம் போட்டு போராட்டம்
x
தினத்தந்தி 15 Jan 2021 4:25 AM IST (Updated: 15 Jan 2021 4:25 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் நகராட்சியில் சுமார் 170 ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தாமரைக்குளம், 

அரியலூர் நகராட்சியில் சுமார் 170 ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பொங்கல் பண்டிகையை எவ்வாறு கொண்டாடுவது. என்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், சம்பள தொகையை வழங்கக்கோரி அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஊழியர்கள் நேற்று நாமம் போட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசு தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கிய பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாயும் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 More update

Next Story