தர்மபுரி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

தர்மபுரி மாவட்த்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சமத்துவ பொங்கல் விழா
தர்மபுரி எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் தகடூர் ரவி வரவேற்றார்.
பொருளாளர் குமரன், துணைத் தலைவர்கள் சம்பத், ராமன், துணை செயலாளர் சீனிவாசன், கவுரவத் தலைவர் வஜ்ரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார்.
விழாவில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, தொழிலதிபர்கள் நந்தி மாதேஸ்வரன், கருப்பண்ணன், மக்கா மஸ்ஜித் தலைவர் முகமது யாரப் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க துணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
தி.மு.க.
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கட்சி நிர்வாகிகள், ெபாதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். விழாவில் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, சிவம், நகர பொறுப்பாளர் அன்பழகன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டி முருகேசன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் காசிநாதன், முல்லைவேந்தன், கோமளவள்ளி ரவி, சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, ரஹீம், முத்துலட்சுமி, சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க.
தர்மபுரியில் தே.மு.தி.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். விஜயகாந்த் மன்ற மாநிலத் துணைச்செயலாளர் மாரிமுத்து, மாநில தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் விஜய் வெங்கடேஷ், மாவட்ட அவைத்தலைவர் தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாண்டியன் வரவேற்றார்.
இந்த விழாவில் கட்சியின் அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் விக்னேஷ் குமார், சரவணன், ரங்கநாதன், ஜம்பேரி, ராஜேந்திரன், விஜயகாந்த், ரகு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சீனிவாசன், அணி நிர்வாகிகள் தேவதேவன், ராமன்,
கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வட்டுவனஅள்ளி-அரூர்
பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் வட்டுவனஅள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் கோவிந்தசாமி,
துணைத்தலைவர் தமிழ் பெரியசாமி, ஊராட்சி செயலாளர் ராமசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் டேங்க் ஆபரேட்டர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர்.
அரூர் போலீஸ் நிைலயத்தில் சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி போலீசார் பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி மற்றும் போலீசார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story