எருது விடும் விழாவில் ஓடும்போது விபத்தில் சிக்கிய காளைக்கு 7 மணி நேரம் அறுவை சிகிச்சை


எருது விடும் விழாவில் ஓடும்போது விபத்தில் சிக்கிய காளைக்கு 7 மணி நேரம் அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 16 Jan 2021 11:53 AM GMT (Updated: 2021-01-16T17:23:26+05:30)

அணைக்கட்டில் எருது விடும் விழாவில் ஓடும்போது விபத்தில் சிக்கிய காளைக்கு 7 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வேலூர், 

அணைக்கட்டில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள காளைகள் கலந்து கொண்டன. ஆலங்காயம் அருகே காவலூரை சேர்ந்த அண்ணாமலை என்பவர் தனது காளை மாட்டை கொண்டு சென்றார். எருது விடும் திருவிழாவில் இந்த காளை அவிழ்த்துவிடப்பட்டது. அப்போது இந்த காளை ஓடியதில் அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மாட்டின் வயிற்றுப்பகுதி விலா எலும்புகள் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காளை மாட்டினை உரிமையாளர் வேலூர் பன்முக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு மாட்டிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் ரவிசங்கர், சுரேஷ் ஆகியோர் முடிவு செய்தனர்.

அதன்படி வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் அறிவுரையின் பேரில் காலை 11 மணிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை மாலை 6 மணி வரை அதாவது 7 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது.

Next Story