பழவேற்காடு அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

பழவேற்காடு அருகே ஆரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.
சுற்றுலா சென்றனர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த மணலி பெரியசேக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 32). இவர் தனது நண்பர்கள் சரவணன் (40), கார்த்திக் (38), குணசேகரன் (48), இளங்கோவன் (35) ஆகியோருடன் பழவேற்காட்டுக்கு சுற்றுலா சென்றனர்.
போலீசார் வழியில் தடுத்து நிறுத்தியதால் பழவேற்காட்டை அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தின் வழியாக செல்லும் ஆரணி ஆற்றில் குளிக்க சென்றனர்.
சாவு
ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்தவர்களை பார்த்தவுடன் நாமும் மீன் பிடிக்கலாம் என்ற நோக்கத்தில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது கால் தவறி ஆரணி ஆற்றில் தண்ணீர் உள்ள பள்ளத்தில் பாலாஜி விழுந்தார்.
அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story