தஞ்சை மாவட்டத்தில் திறப்புக்கு தயாராகும் பள்ளிகள் வகுப்பறைகளை தூய்மை படுத்தும் பணி தீவிரம்


தஞ்சை மாவட்டத்தில் திறப்புக்கு தயாராகும் பள்ளிகள் வகுப்பறைகளை தூய்மை படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 Jan 2021 3:13 AM GMT (Updated: 17 Jan 2021 3:13 AM GMT)

தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளை திறக்கப்படுவதை முன்னிட்டு வகுப்பறைகளை தூய்ைமை படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

கொரோனா தொற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா தொற்று குறைந்து வந்ததால் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து வருகிற 19-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) முதல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகள் செயல்படும் வகையில் பள்ளிகளை திறக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 438 பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இதனால் பள்ளிகளை தயார் செய்யும் வகையில் தூய்மைப்பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

பராமரிப்பு பணி

பள்ளி மைதானத்தில் வளர்ந்து கிடக்கும் புற்களை அகற்றும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் பல பள்ளிகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தப்படுத்தி தயார் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story